×

குளத்தூரில் சிறுவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்

குளத்தூர், மே 10: குளத்தூர் ஜாலி பிரண்ட்ஸ் கபடி கிளப் சார்பில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம், குளத்தூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஒற்றைகால் ஓட்டம், உயரம் தாண்டுதல், கபடி, யோகா போன்ற பல்வேறு விளையாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் ரமேஷ்குமார், சுகுமார், பழனி, சூரியபாலன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

The post குளத்தூரில் சிறுவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Kulathur Jolly Friends Kabaddi Club ,Hindu Nadar Middle School ,Dinakaran ,
× RELATED குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2...